தேசியம்
செய்திகள்

புதிய COVID மாறுபாட்டின் பரவலைத் தடுக்க மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அவசியம்:   Alberta மாகாண மருத்துவர்கள்

புதிய COVID மாறுபாட்டின் பரவலைத் தடுக்க, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Alberta மாகாண மருத்துவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சொந்த பயணக் கட்டுப்பாடுகளை மாகாணங்கள் அமுல்படுத்த வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.
முன்னர் Newfoundland and Labrador, Nova Scotia, மற்றும் P.E.I. ஆகிய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான  பயணக் கட்டுப்பாடுகள் போன்ற நகர்வை வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதேவேளை தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழைய அனைத்து வெளிநாட்டினரும் தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரிப்பதாக Alberta முதல்வர் பிரதமர் Jason Kenney கூறுகிறார்.

புதிய கட்டுப்பாடுகளுடன் தான் உடன்படுவதாக கூறிய முதல்வர் Kenney, தொற்றின் ஆரம்பத்தில் முன்னெடுத்த திறந்த எல்லைக் கொள்கையின் தவறை கனடா மீண்டும் செய்யக்கூடாது எனவும் கூறினார்.

Related posts

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியானது !

Gaya Raja

தடுப்பூசி பெறவில்லையா? விமானங்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்கத் தடை!

Lankathas Pathmanathan

Leave a Comment