தேசியம்
செய்திகள்

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

British Colombia மாகாணத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தின் எதிரொலியாக விடுக்கப்பட்ட சில வெளியேற்ற உத்தரவுகள் வியாழக்கிழமை நீக்கப்பட்டன.
ஆனாலும் புதன்கிழமை முதல்வர் John Horgan பிரகடனப்படுத்திய அவசர நிலை தொடர்ந்து அமுலில் உள்ளது.

புயலுக்குப் பின்னர் மீட்புப் பணிகள் 24 மணி நேரமும் தொடர்கிறது.

ஆனால் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து தமது இல்லங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் 120 கனடிய ஆயுதப் படை வீரர்கள் Abbotsfordடில் வியாழக்கிழமை இரவுக்குள் தரையிறங்க ஏற்பாடானது.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இதனை உறுதி செய்துள்ளார்

அடுத்த 30 நாட்களிலும், அதற்கு மேலும் தேவை ஏற்பட்டாலும், உதவிகளை வழங்க கனடிய ஆயுதப் படையினர் தயாராக உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சருடன் அவசரகால தயார்நிலை அமைச்சர் Bill Blair, போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra, இயற்கை வள அமைச்சர் Jonathan Wilkinson ஆகியோர் இணைந்து British Columbiaவிற்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்களை வியாழன் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

 

Related posts

இனவெறி காரணமாக பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சி: பசுமைக் கட்சியின் தலைவி குற்றச்சாட்டு

Gaya Raja

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமர் அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம்

Leave a Comment