தேசியம்
செய்திகள்

கலப்பு தடுப்பூசிகளை பெற்ற கனேடியர்களை அனுமதிக்கவுள்ள அமெரிக்கா!

அமெரிக்கா தனது நிலம் மற்றும் கடல் எல்லையை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகளுக்குத் திறக்கவுள்ளது.

ஒரு நீண்ட மற்றும் முன்னோடி இல்லாத பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு அமெரிக்கா தனது நில எல்லையை மீண்டும் திறக்கின்றது.

கலப்பு COVID தடுப்பூசிகளை பெற்ற கனேடிய பயணிகளை அனுமதிக்கவும் அமெரிக்கா இன்று முடிவு செய்துள்ளது

உலகில் பாதுகாப்பற்ற அதிக நீளமான சர்வதேச எல்லையான கனடா அமெரிக்கா எல்லை கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக அறிவுறுத்தல்களை வெளியிடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

Leave a Comment