தேசியம்
செய்திகள்

தொற்று கட்டுப்பாடுகளை விரைவில் திரும்ப பெறுவதற்கு மன்னிப்பு கோரிய Alberta முதல்வர்!

Albertaவில் வியாழக்கிழமை 1,718 புதிய COVID தொற்றுக்களுடன் 10 மரணங்களும் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில், தொடந்தும் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகிவருகின்றன.

தொற்றின் நாளாந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவசர கால நிலை முடிவை முதல்வர் Jason Kenney புதன்கிழமை அறிவித்தார்.

Albertaவின் வைத்தியசாலையில் 896 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 222 பேர் தீவிர சிகிக்சை பிரிவில் உள்ளதாக வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Alberta புதன்கிழமை தடுப்பூசி சான்றிதழ் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளது.

கனடாவின் ஏனைய பல மாகாணங்கள் ஏற்கனவே அறிவித்துள்ள தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தை Albertaவும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வரவுள்ளன.Albertaவில் தொற்றின் நான்காவது அலையை தடுப்பூசி போடாதவர்களின் நெருக்கடி என Kenney வர்ணித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தொற்றுக் கட்டுப்பாடுகளை விரைவில் திரும்பப் பெறுவதற்கான தனது முடிவுக்கு முதல்வர் Kenney மன்னிப்பு கோரினார்.

Related posts

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

Lankathas Pathmanathan

கனடாவாக மாறிய நிலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதற்குடியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது: இளவரசர் Charles

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan

Leave a Comment