தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

முன்கூட்டிய வாக்குப்பதிவு நடந்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 1.3 மில்லியன் வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது 2019 பொது தேர்தலின் போது முதல் நாளில் பதிவான முன்கூட்டிய வாக்களிப்பை விட சற்று அதிகரிப்பு ஆகும்.

வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை தொடரவுள்ளது.

2019இல் மொத்தமாக 4.65 மில்லியன் வாக்குகள் பதிவாகின. இது 2015இல் 3.65 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Beijing ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Humboldt Broncos பேருந்து விபத்தின் ஆறாவது ஆண்டு நினைவு

Lankathas Pathmanathan

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி வீழ்ந்த Montreal நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment