தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தின் 5வது கட்டத்திற்கு நகரும் Nova Scotia!

Nova Scotia மாகாணம் September மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கும் திட்டத்தின் 5வது கட்டத்திற்கு நகர உள்ளது.

புதன்கிழமை மாகாண முதல்வர் Tim Houston இதனை அறிவித்தார். 5வது கட்டம் பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கும் அதே வேளையில், நான்காவது அலையின் தாக்கத்தையும், Delta மாறுபாடு ஏற்படுத்தும் தாக்கத்தையும் புறக்கணிக்க முடியாது என முதல்வர் கூறினார்.

அதனால் தடுப்பூசியை பெறுவதைத் தொடர்ந்து ஊக்குவிக்க உள்ளதாக முதல்வர் Houston தெரிவித்தார்.

அதேவேளை October மாதம் 4ஆம் திகதி முதல் Nova Scotiaவில் அத்தியாவசியமற்ற சேவைகளுக்கு 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  தடுப்பூசிக்கான ஆதாரம் தேவை என இன்று அறிவிக்கப்பட்டது.

Related posts

இடர்கால உதவித் திட்டங்களை நீட்டிக்கும் அரசாங்கம்!

Gaya Raja

பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory

Lankathas Pathmanathan

முன்னாள் NDP தலைவர் Ed Broadbent மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment