தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தல் February 27?

Ontario மாகாண சபை தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அறிவித்தலை முதல்வர் Doug Ford எதிர்வரும் புதன்கிழமை (29) வெளியிடுவார் என மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (25) நடைபெறும் முக்கிய Progressive Conservative கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பில் முதல்வர் தனது முடிவு குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிப்பவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ontario மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்த முதல்வர் Doug Ford தயாராகி வருவதாக கடந்த சில வாரங்களாக செய்தி வெளியாகியது.

அமெரிக்க ஜனாதிபதியை கையாள்வதற்கு தனது அரசாங்கத்திற்கு புதிய ஆணை தேவை என Ontario முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் நான்கு ஆண்டு பதவிக் காலம், அவரது அரசாங்கம் வாக்காளர்களிடம் தெளிவான ஆணையை கோர போதுமானதாக இருக்கும் என Doug Ford பரிந்துரைத்தார்.

Ontarioவில் Progressive Conservative கட்சி கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்த தேர்தல் குறித்த அறிவித்தல் வெளியாகவுள்ளது.

NDP, Liberal, பசுமைக் கட்சியினர் அனைவரும் முன்கூட்டிய தேர்தலை நிராகரிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

ஒரு திடீர் தேர்தல் மாகாணத்தில் தேவையற்ற ஸ்திரமின்மையை உருவாக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் Doug Fordக்கு புதிய மக்கள் ஆணை தேவையில்லை என தெரிவித்த NDP தலைவர் Marit Stiles, இந்த திடீர் தேர்தல் அழைப்புக்காக முதல்வரை கடுமையாக விமர்சித்தார்.

குளிர்காலத்தின் நடுவில் இதுபோன்ற ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் வாக்காளர்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள் என முதல்வர்  நம்புவதாக Marit Stiles குற்றம் சாட்டினார்.

இந்த தேர்தல் முடிவை Ontario Liberal தலைவர் Bonnie Crombie கடுமையாக விமர்சித்தார்.

இது ஒரு  சுயநலமிக்க நடவடிக்கை என அவர் கூறினார்.

புதனன்று வெளியாகவுள்ள தேர்தல் அறிவித்தல் மூலம்  Ontario மாகாண சபைத் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக நடைபெறவுள்ளது.

அடுத்த மாகாணசபை தேர்தல் June 2026 நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

April 28 கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல்

Lankathas Pathmanathan

ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது: கனடாவுக்கான உக்ரைன் தூதுவர்

Lankathas Pathmanathan

தடுப்பூசிகள் இல்லாதிருந்தால் கனடாவில் மூன்றாவது அலை ஆபத்தானதாக இருந்திருக்கும்!

Gaya Raja

Leave a Comment