தேசியம்
செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட Moderna COVID தடுப்பூசிக்கு அங்கீகாரம்!

புதுப்பிக்கப்பட்ட Moderna COVID-19 தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

இந்த புதிய தடுப்பூசியை தற்போது பரவி வரும் மாறுபாடுகளுக்கு எதிராக பாதுகாக்கிறது என Health கனடா தெரிவித்தது.

Spikevax என்ற பெயரில் அறியப்படும் இந்த தடுப்பூசி Omicron இன் KP.2 துணை வகையை குறிவைக்கும் வகையில் மறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட தடுப்பூசியின் முந்தைய பதிப்பை மாற்றீடு செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

பழைய COVID-19 தடுப்பூசிகளை உபயோகிக்க வேண்டாம் என மாகாணங்கள், பிரதேசங்களை அண்மையில் Health கனடா கோரியிருந்தது.

இலையுதிர் காலத்தில் புதிய  தடுப்பூசி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Health கனடா வேறு இரண்டு புதுப்பிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளையும் மதிப்பாய்வு செய்து வருகிறது.

ஆனால் அவை இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

Related posts

Torontoவுக்கான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan

குளிர்கால புயல் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தை தாக்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment