தேசியம்
செய்திகள்

ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்ட Toronto காவல்துறை

Toronto காவல்துறையினர் 1 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.

திருட்டு சம்பவங்கள் குறித்த காவல்துறையினரின் இந்த விசாரணையில் ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன

கடந்த கோடை காலம் முதல் நிகழ்ந்த தொடர்ச்சியான வாகன திருட்டுகள், ஆயுதமேந்திய கொள்ளைகள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் பதிவானதுடன் திருடப்பட்ட பொருட்கள் மீட்டுள்ளன.

புதன்கிழமை (05) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதான Amir Inyat (Brampton), 25 வயதான Shais Ejaz (Brampton), 32 வயதான Mohammad Habib (Toronto), 21 வயதான Kausar Rahimzada (Toronto), 22 வயதான Steven Singh (Brampton) ஆகியோரின் விபரங்கள் வெளியிடப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குகின்றார்.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் காரணமாக இவருடைய பெயரை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மெழுகுவர்த்தி அஞ்சலி

Lankathas Pathmanathan

Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு அதியுயர் அதிகாரம் – புதிய சட்டம் அறிமுகம்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலதிக கடன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment