தேசியம்
செய்திகள்

ஒரு மில்லியன் குழந்தைகள் மருந்துகள் அடுத்த வாரத்தில் கனடாவை வந்தடையும்

குழந்தைகளுக்கு ஒரு மில்லியன் மருந்துகளை அடுத்த வாரத்தில் கனடா இறக்குமதி செய்கிறது.

குழந்தைகளுக்கான வலி நிவாரணி மருந்துகள் ஒரு மில்லியன் அடுத்த வாரம் முதல் கனடாவை வந்தடைய உள்ளன.

கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் Dr. Supriya Sharma வெள்ளிக்கிழமை (18) இந்த தகவலை வெளியிட்டார்.

கனடாவை வந்தடையும் மருந்துகள் மருத்துவமனைகள், சமூக மருந்தகங்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு மருந்துகளை பெறுவது பெற்றோருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையை சரிசெய்ய, Health கனடா தன்வசம் உள்ள அனைத்து வளங்களையும் ஆராய்ந்து வருவதாக Dr. Supriya Sharma கூறினார்.

கனடாவில் தற்போது 800 மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் 23 மருந்துகள் மிகக் குறைந்த அளவுகளில் உள்ளதாகவும் Health கனடா தெரிவித்தது.

கனடாவில் மருந்து தட்டுப்பாடு கடந்த வசந்த காலம் முதல் ஆரம்பமாகியுள்ளது.

Related posts

கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வராகும் Jennifer McKelvie?

Lankathas Pathmanathan

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment