தேசியம்
செய்திகள்

பணவீக்க விகிதம் June மாதத்தில் 8.1 சதவீதமாக பதிவானது

கனடாவில் வாழ்க்கைச் செலவு பல தசாப்தங்களில் இல்லாத அதிக வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கனடாவின் பணவீக்க விகிதம் June மாதத்தில் 8.1 சதவீதமாக இருந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

எரிபொருளின் விலை உயர்ந்ததை தொடர்ந்து கனடாவில் வருடாந்த பணவீக்க விகிதம் June மாதத்தில் 8.1 சதவீதத்தை எட்டியது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருளின் விலை 54.6 சதவீதமும், June மாதத்தில் 6.2 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இது பணவீக்க அதிகரிப்புக்கான முதன்மை காரணியாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சமீபத்திய பணவீக்க அளவீடுகள் January 1983க்குப் பின்னரான மிக அதிகமாக பதிவாகும்.

Related posts

குறைவடையும் வேலையற்றோர் விகிதம்!

Ontarioவில் மூன்று வாரங்களில் முதல் முறையாக 200க்கும் அதிகமான தொற்றுக்கள் !

Gaya Raja

இந்த வாரம் 1.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

Leave a Comment