தேசியம்
செய்திகள்

British Colombia முதல்வருக்கு COVID தொற்று உறுதி

British Colombia முதல்வர் John Horganக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் Horgan, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை திங்கட்கிழமை (04) உறுதிப்படுத்தினார்.

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் தனது அறிகுறிகள் இலேசானவை என அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் வீட்டிலிருந்து கடமையாற்ற உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeauவை சந்தித்தது உட்பட முதல்வர் Horgan, சமீபத்தில் மாகாணம் முழுவதும் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

Related posts

விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க WestJet முடிவு

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தலில் இம்முறை ஏழு தமிழ் வேட்பாளர்கள்!

Gaya Raja

வட அமெரிக்காவின் முதல் Volkswagen EV தொழிற்சாலை Ontarioவில்

Lankathas Pathmanathan

Leave a Comment