தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம்!

கனடிய நாடாளுமன்றம் அவசரகாலச் சட்டப் பிரேரணையை திங்கட்கிழமை இரவு நிறைவேற்றியது.

அவசரகால அதிகாரங்கள் பிரகடனத்தை உறுதிப்படுத்தும் பிரேரணை 185-151 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பு, குறைந்தது March நடுப்பகுதி வரை அவசரகாலச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்க அனுமதிக்கிறது.

சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு ஆதரவாக புதிய ஜனநாயகக் கட்சியினர் இதற்கு வாக்களித்தனர்.

தனது கட்சி இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் என முன்னதாகவே புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறியிருந்தார்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் தேவையில்லை என்ற நிலை வந்தவுடன் தமது ஆதரவை திரும்பப் பெறப்படும் என Singh தெரிவித்தார்.

Conservative, Bloc Quebecois கட்சிகள் இந்தப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.

இரண்டு பசுமை கட்சி உறுப்பினர்களில் ஒருவர் பிரேரணைக்கு ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் வாக்களித்தனர்.

Senate சபையும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேடப்படும் Akwesasne நபருக்கும் சடலமாக மீட்கப்பட்ட எட்டு பேருக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு!

Lankathas Pathmanathan

70 மில்லியன் டொலர் Lotto Max அதிஸ்டலாப சீட்டு Quebecகில் விற்பனை

Lankathas Pathmanathan

Leave a Comment