தேசியம்
கனேடிய தேர்தல் 2021

தடைகளுக்கு எதிரான சுதந்திரவாதி Maxime Bernier

அரசியலில் 15 வருட அனுபவத்துடன் சர்ச்சைகளின் நடுநாயகமாக விளங்கும்                  Maxime Bernier விடாமுயற்சியுடன் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்கின்றார். சுதந்திரவாத சார்பு நிலை கொண்ட கனடாவின் மக்கள் கட்சியின் (People’s Party of Canada) 58 வயதான தலைவர் இவர். 2006ஆம் ஆண்டில் Stephen Harperரின் கீழ் அமைச்சரவையில் இவர் அறிமுகமானபோது, நாட்டிற்கான இலட்சியப் பார்வை கொண்ட ஒருவராக தென்பட்டார். ஆனாலும் காலம் அனைத்தையும் மாற்றியது. 2017இல் Conservative கட்சி தலைமையை
நூலிழையில் தவறவிட்ட Bernier, September 2018இல் தனது புதிய கட்சியை உருவாக்கினார்.
தனது கட்சி தனிநபர் சுதந்திரம் (individual freedom), தனிப்பட்ட பொறுப்பு (personal responsibility), மரியாதை (respect), நேர்மை (fairness) ஆகியவற்றை அடித்தளமாக கொண்டுள்ளது என்கிறார் Bernier. தமது கொள்கைகள் அனைத்தும் இந்த நான்கு கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்பது அவரது கூற்றாகும். 2021இல் தேர்தலுக்கு முன்னதாக Bernierரின் கொள்கைகளில் ஒரு புதிய விடயமும் இணைந்துள்ளது. அது COVID தடைகளுக்கு எதிராக போராடுவதாகும். Quebecகின் Beauce தொகுதியில் மீண்டும் போட்டியிடும் Bernier, Conservative கட்சியிடமிருந்து இந்த தொகுதியை மீண்டும் வெல்வதை குறியாக கொண்டுள்ளார். 2006ஆம் ஆண்டு முதலில் இந்த தொகுதியில் வெற்றிபெற்ற Bernier, 2018 வரை Conservative கட்சியின் சார்பில் இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2019ஆம் ஆண்டு புதிய கட்சியின் தலைவராக தேர்தலை எதிர்கொண்ட Bernier சுமார் 10 சதவிகித வாக்குகளால் இந்த தொகுதியில் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் அவரது கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இம்முறை மீண்டும் Beauce தொகுதியில் Bernier போட்டியிடுகின்றார். COVID தடைகளின் தீவிர எதிர்ப்பாளரான இந்த சுதந்திரவாதிக்கு இம்முறை தேர்தல் முடிவு சாதகமாக இருக்குமா?

ரம்யா சேது

Related posts

தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளான Albertaவின் தொற்று நிலை!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சிகளில் தலைவர்கள்!

Gaya Raja

Leave a Comment