நூறாயிரக்கணக்கான Quebec பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நூறாயிரக்கணக்கான Quebec மாகாண பொதுத்துறை ஊழியர்கள் திங்கள்கிழமை (06) முதல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து பணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுமார் 420,000 தொழிலாளர்களை கொண்ட ஒரு பொது முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தொழிற்சங்கங்கள் Quebec மாகாணத்தின் சமீபத்திய ஒப்பந்த சலுகையை எதிர்த்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பாடசாலைகள், சுகாதார நிலையங்கள், சமூக சேவைகள் என பல தரப்பினரின் நாளாந்த நடவடிக்கைகள் சீர்குலையும் என எதிர்வு கூறப்படுகிறது