தேசியம்
செய்திகள்

தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவு

தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவாகியுள்ளன.
Ottawa, Vancouver, Toronto ஆகிய நகரங்கள் தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் முதல் 20 நகரங்களின் பட்டியலில்   இடம்பிடித்துள்ளன என ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

இந்த பட்டியலுக்காக 51 அமெரிக்க நகரங்களும், உலகின் பிற பகுதிகளிலிருந்து 49 நகரங்களும் கருத்தில் எடுக்கப்பட்டன.

Ottawa 100க்கு 95.51 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தைப் பெற்று, இந்த பட்டியலில் முதல் தரவரிசையில் உள்ள கனேடிய நகரானது.

Vancouver 92.23 புள்ளிகளைப் பெற்று  பட்டியலில் 16வது இடத்தைப் பெற்றுள்ளது.

Toronto 91.12 மதிப்பெண்ணுடன் 19வது தரவரிசையில் உள்ள நகரமாக உள்ளது.

Related posts

மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு குறித்து பரிசீலிக்கும் Ontario அமைச்சரவை!

Gaya Raja

பதவி இழப்பாரா Alberta முதல்வர்?

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்து வருகிறது: கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை

Leave a Comment

error: Alert: Content is protected !!