February 12, 2025
தேசியம்
செய்திகள்

காசாவில் சிக்கியுள்ள கனேடியர்கள் திங்கள் முதல் வெளியேறுவார்கள்?

காசாவில் சிக்கியுள்ள கனேடியர்கள் திங்கட்கிழமை (06) முதல் வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்

எகிப்தின் Rafah எல்லையைக் கடந்து அவர்கள் கனடா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆனாலும் காசா, எகிப்து இடையே எல்லை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் காசாவில் சிக்கியுள்ள கனேடியர்களுடன் தொடர்பு கொள்வது கடினமாக உள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

வடக்கு காசாவில் சிக்கியுள்ள கனேடியர்களுக்கு Rafah எல்லையை சென்றடைவதற்கு எந்த வழியும் இல்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது

காசா பகுதியில் உள்ள 596 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில்,  450 பேர் காசாவை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மூன்று கனேடியர்கள் மூன்றாம் தரப்பின் ஊடாக காசாவில் இருந்து எல்லையைத் தாண்டியுள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் Francis Fox மரணம்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja

முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman காலமானார்!

Lankathas Pathmanathan

Leave a Comment