தேசியம்
செய்திகள்

Alberta மாகாணம் கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து வெளியேறுவது மாற்ற முடியாத தவறு?

கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து (Canada Pension Plan – CPP) Alberta மாகாணம் வெளியேறுவது மாற்ற முடியாத ஒரு தவறு என மத்திய நிதியமைச்சர் Chrystia Freeland தெரிவித்தார்.

Alberta மாகாண முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

CPP யில் இருந்து வெளியேறி அதன் சொந்த ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க மாகாணத்திற்கு உரிமை உள்ளது என்பதை Chrystia Freeland  ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அத்தகைய நடவடிக்கையின் எதிர்மறையான விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து  Alberta மாகாணம் வெளியேறுவது குறித்து மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்களை மத்திய நிதியமைச்சர் Chrystia Freeland இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார்.

Related posts

Pierre Poilievre சபையை விட்டு வெளியேற்றம்!

Lankathas Pathmanathan

Kingston நகரில் இருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம்!

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment