தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Quebec மாகாணம் மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளது.
Quebec முதல்வர் François Legault மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளியிட்டார்.

தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின் போது கூறினார்.

முகமூடி உத்தரவுகளை நீக்கவோ, தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை முடிவுக்கு கொண்டு வரவோ தனது அரசாங்கம் தயாராக இல்லை என அவர் கூறினார்.

இவை இரண்டும் குறைந்தது March 14 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அதன் பின்னர் அவை மறுமதிப்பீடு செய்யப்படும் எனவும் Legault தெரிவித்தார்

தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

வெளிநாட்டு தலையீட்டு விசாரணை தொடர்கிறது?

Lankathas Pathmanathan

Michael Chongக்கு எதிரான சீனாவின் பிரச்சாரம் குறித்த ஆய்வை ஆரம்பிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல்

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment