தேசியம்
செய்திகள்

தொற்று எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை எதிர்கொள்ளும் கனடா!

புதிய COVID தொற்றின் எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை கனடா எதிர்கொள்கிறது கனடாவின் ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமான நிலையை இந்த வாரம் எட்டியுள்ளது. நாடு முழுவதும் தினசரி தொற்றுகள் அதிகரித்து வருவதாக பல மாகாணங்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகையில் இந்த புதிய வாராந்த பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, கனடாவில் ஏழு நாள் சராசரி புதிய தொற்றின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 444.7 ஆக இருந்தது. இது கண்காணிக்கப்பட்ட தரவுகளின்படி, ஒரு புதிய சாதனையாக  அமைந்துள்ளது.கனடா எதிர்கொள்ளும்  மூன்றாவது அலைக்கு மத்தியில் ஒரு கடுமையான மைல் கல்லையும் இது குறிக்கிறது.

கனடாவின் முந்தைய அதிகபட்ச ஏழு நாள் சராசரி January மாதம் 10 ஆம் திகதி அன்று 8 ஆயிரத்து 260.6 தொற்றுக்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐந்து மில்லியன் கனேடியர்கள் இதுவரை COVID தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

Air Canadaவுக்கு கனடிய அரசாங்கத்தின் உதவித் திட்டம்!

Gaya Raja

உலக Junior Championship தொடரில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment