தேசியம்
செய்திகள்

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Ontario மேலும் கடுமையான COVID தொற்றின் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கும் என கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள modelling தரவுகள் May மாத இறுதிக்குள் Ontarioவில் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 18 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் முதல்வர் Doug Ford தலைமையிலான அரசாங்கம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை ஆராந்து வருவதாக கூறப்படுகிறது.

Ontarioவின் தற்போதைய எண்ணிக்கையின் அடிப்படையில் May மாத இறுதிக்குள் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம்  வரையிலான புதிய நாளாந்த தொற்றுகள் பதிவாகலாம் எனவும் 1,800 பேர் வரை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படலாம் எனவும் modelling விவரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

Ontarioவில் தற்போது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு ஒன்று அமுலில் உள்ளது. ஆனாலும் மாகாணத்தின் வீட்டில் தங்குவதற்கான உத்தரவை மீறுபவர்களின் எண்ணிக்கை குறித்து அரச மட்டத்தில் பெரும் விரக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவு ஒன்றை அறிவிப்பது குறித்த பரிசீலனை அமைச்சரவை மட்டத்தில் உள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

Related posts

அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு

Lankathas Pathmanathan

Trudeau அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குநர் குழு உறுப்பினர்கள் பதவி விலகல்

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment