தேசியம்
செய்திகள்

கனடா தொற்று எண்ணிக்கையில் ஒற்றை நாள் சாதனையை வியாழக்கிழமை பதிவு செய்தது

COVID தொற்று எண்ணிக்கையில் வியாழக்கிழமை கனடா புதிய ஒற்றை நாள் சாதனையை பதிவு செய்துள்ளது.

கனடாவில் வியாழக்கிழமை 9,561 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இந்தப் புதிய பதிவு ஒரு மோசமான மைல்கல்லை குறிக்கிறது. நாடு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. 
Ontarioவில் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்களும், Quebec, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும் வியாழக்கிழமை பதிவாகின.

Ontario தொற்றின் ஆரம்பத்தின் பின்னர் வியாழக்கிழமை முதல் தடவையாக 4,700க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு செய்துள்ளது. Ontarioவின் சுகாதார மருத்துவ துணை அதிகாரி வைத்தியர் Barbara Yaffe, மாகாணத்தின் நிலைமை “மோசமானது” என கூறினார். Quebec மாகாணத்திலும் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

கனடாவின் மிக உயர்ந்த ஏழு நாள் தொற்றுக்களின் எண்ணிக்கையை Alberta கொண்டுள்ளது. British Columbiaவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 409 என பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை Ontarioவில் 4,736, Albertaவில் 1,646, Quebecகில் 1,513, British Columbiaவில் 1,205, Saskatchewanனில் 293, Manitobaவில் 153, New Brunswickகில் 8, Nova Scotiaவில் 3, Newfoundland and Labradorரில் 2, Prince Edward Islandடில் 2 என  தொற்றுக்கள் பதிவாகின. அதேவேளை Ontarioவில் 29, Quebecகில் 15, Albertaவில் 5, British Columbiaவில் 3, Saskatchewanனில் 2, Manitobaவில் 1 என மரணங்களும் அறிவிக்கப்பட்டன

வியாழக்கிழமையுடன் கனடாவில் 1,096,716 தொற்றுகளும், 23, 500 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன், 990,074 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை வரை மொத்தம் 9,200,859 தடுப்பூசிகளை கனடியர்கள் பெற்றுள்ளனர். இது கனடியர்களின் மொத்த சனத்தொகையில் 22 சதவீதமாகும்.

Related posts

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வி

Lankathas Pathmanathan

வார விடுமுறை முழுவதும் தொடரவுள்ள அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்

Lankathas Pathmanathan

காலாவதியாக உள்ள தடுப்பூசியை வீணாக்க வேண்டாம்: மத்திய அரசு மாகாணங்களிடம் கோரிக்கை

Gaya Raja

Leave a Comment