தேசியம்
செய்திகள்

தமிழர் சமூகத்தின் பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நாள் இது – சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி கனடிய பிரதமர்

கனடாவில் தமிழர் சமூகம்  தொடர்ந்து வழங்கிவரும் பல பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நாள் இது என கனடிய பிரதமர் கூறியுள்ளார்.

தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார். தொற்றை எதிர்கொள்ளும் வகையில் முன்னிலை பணியாளர்களாக கடமையாறுவதன் மூலம் கனடியர்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதிலும், கடினமான காலங்களில் தங்களை சுற்றியுள்ள சமூகங்களுக்கும் உதவிதிலும், தமிழ் கனடியர்கள் கனடாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுகின்றனர் என பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் Trudeau குறிப்பிட்டார்.

கனடிய பசுமை கட்சி,  அமைச்சர் அனிதா ஆனந்த், அமைச்சர் Mary Ng, அமைச்சர் Bardish Chagge, அமைச்சர் Maryam Monsef, Toronto மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Marci Ien, Ajax தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Mark Holland, Brampton தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Sonia Sidhu, Etobicoke மேற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan, Davenport தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Julie Dzerowicz ஆகியோரும் சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்திகளை வெளியிட்டனர். 

Related posts

Ontario NDPயின் இடைக்காலத் தலைவரானார் Peter Tabuns

எல்லைப் பணியாளர்கள் ;வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தம்!

Gaya Raja

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment