November 16, 2025
தேசியம்
செய்திகள்

இரத்து செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேருக்கான தடுப்பூசி முற்பதிவுகள்

Ontarioவின் சுமார் 10 ஆயிரம் பேருக்கான தடுப்பூசிக்கான முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இரண்டு தடுப்பூசி வழங்கும் முகாங்களில்  இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவிருந்தன. தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த தடுப்பூசி வழங்கல்கள் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

Centennial கல்லூரியிலும் Centenary மருத்துவமனையிலும் நடைபெற இருந்த தடுப்பூசி வழங்கல் முகாங்களே  இரத்து செய்யப்பட்டுள்ளதாக Scarborough சுகாதார வலையமைப்பு தெரிவித்தது. தேவையான தடுப்பூசிகள் விநியோகத்தை பெற்றவுடன் மீண்டும் தடுப்பூசி முகாங்கள் இயங்க ஆரம்பிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் Ontario அரசாங்கத்தின் தகவலுக்கு மாறாக மாகாணத்தில் தேவையான தடுப்பூசி கைவசம் உள்ளதாக COVID tracker  கனடா தரவுகள் தெரிவிக்கின்றன. Ontarioவில் 10 இலட்சத்து 83 ஆயிரத்து  521 தடுப்பூசிகள் கைவசம் உள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. Ontario  மாகாணம் தினமும் சுமார் 1 இலட்சத்து 12 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கி வருவதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. இது Ontario அரசிடம் தற்போது சுமார் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றது. 

Related posts

Floridaவில் LGBTQ நிகழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்த Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களுக்கு இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வாகனம் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ் இளைஞர்!

Lankathas Pathmanathan

Leave a Comment