தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Quebec மாகாணத்தில் தொடரும் கடும் பனி காரணமாக 100,000க்கும் அதிகமானோர் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

Mauricie, Quebec City பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி 110,000 Hydro-Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

பலத்த பனிப்பொழிவு காரணமாக மரக்கிளைகள் முறிவதாகவும், அவை மின்கம்பிகளை தாக்குவதாகவும் Hydro-Québec பேச்சாளர் தெரிவித்தார்.

100 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிந்தவரை விரைவாக மின்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாணம் முழுவதும் பல பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

Related posts

Mississauga-Lakeshore தொகுதியில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு நிதி உதவி

Lankathas Pathmanathan

Conservative கட்சித் தலைவர் தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment