வியாழக்கிழமை (08) மதியம் வரை ஒன்பது மாகாணங்கள், இரண்டு பிரதேசங்களில் 431 காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதாக தெரியவருகிறது.
இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை கட்டுப்பாட்டை மீறி எரிந்து வருகின்றன.
Quebec மாகாணத்தில் மாத்திரம் 140 காட்டுத் தீ எரிகிறது.
இந்த ஆண்டு கனடா முழுவதும் 2,200க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக சுமார் 3.3 மில்லியன் hectare நிலம் எரிந்துள்ளது.
இதுவரை கண்டிராத மோசமான தீ இந்த பருவத்தில் கனடாவில் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கோடை முழுவதும் காட்டுத்தீ ஆபத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.