தேசியம்
செய்திகள்

ஒன்பது மாகாணங்கள், இரண்டு பிரதேசங்களில் தொடர்ந்து 431 காட்டுத்தீ

வியாழக்கிழமை (08) மதியம் வரை ஒன்பது மாகாணங்கள், இரண்டு பிரதேசங்களில் 431 காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதாக தெரியவருகிறது.

இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை கட்டுப்பாட்டை மீறி எரிந்து வருகின்றன.

Quebec மாகாணத்தில் மாத்திரம் 140 காட்டுத் தீ எரிகிறது.

இந்த ஆண்டு கனடா முழுவதும் 2,200க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக சுமார் 3.3 மில்லியன் hectare நிலம் எரிந்துள்ளது.

இதுவரை கண்டிராத மோசமான தீ இந்த பருவத்தில் கனடாவில் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கோடை முழுவதும் காட்டுத்தீ ஆபத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிவு

Lankathas Pathmanathan

Montreal நகர யூதப் பாடசாலை மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களுக்கு உதவ போலந்துக்கு படைகளை அனுப்பும் கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment