February 22, 2025
தேசியம்
செய்திகள்

மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்தம் காரணமாக மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

Saskatchewan மாகாணத்தின் தெற்கு பகுதிகள், Manitoba, Ontario மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

வியாழக்கிழமை (20) ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (21) முழுவதும், Saskatchewanனில் பனி பொழிவு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது Saskatchewan சுற்றுச்சூழல் கனடாவின் பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளது.

Manitobaவின் சில பகுதிகள் 15 முதல் 25 சென்டி மீட்டர் வரை பனி பொழிவை எதிர்கொள்கின்றன.

பனி பொழிவு எச்சரிக்கை காரணமாக வியாழனன்று Manitoba மாகாணம் முழுவதும் பல பாடசாலைகள் மூடப்பட்டன.

வடமேற்கு Ontarioவில் வியாழன் மதியம் ஆரம்பமான பனிப்பொழிவு வெள்ளி இரவு வரை தொடரும் என எதிர்வு கூறப்படுகிறது.

Ontarioவில் வெள்ளி காலை கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது

வெள்ளி இரவுக்குள் 25 சென்டி மீட்டர் வரை பனி பொழிவு Ontarioவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Quebecகின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் September 1 ஆம் திகதி ஆரம்பம்!

Gaya Raja

Toronto துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

Lankathas Pathmanathan

Leave a Comment