New Brunswick மாகாணம் தனது அவசரகாலச் சட்டத்தை மாற்றுகிறது.
எதிர்வரும் வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களை எதிர்கொள்ள இந்த மாற்றத்தை New Brunswick முன்னெடுக்கின்றது.
எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என கூறிய முதல்வர் Blaine Higgs, அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.
இரண்டு வாரங்களுக்கு மேலாக கனடாவின் பல பாகங்களிலும் தொடரும் போராட்டங்கள் இந்த வார இறுதியில் New Brunswick மாகாணத்திலும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.