தேசியம்
செய்திகள்

Ottawa போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் Trudeau

Ottawaவில் இரண்டாவது வாரமாக நீடித்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார்.

சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக்குழுவில் தொடரும் அவசர விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்.

இந்த விவாதத்திற்கு NDP தலைவர் Jagmeet Singh அழைப்பு விடுத்திருந்தார்.

போராட்டங்கள் குறித்து பொதுக்குழுவில் அவசர விவாதம் நடத்த சபாநாயகர் Anthony Rota ஒப்புக் கொண்டார்.

விவாதத்தை ஆரம்பித்த Singh, போராட்டத்திற்கான தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

தவிரவும் போராட்டக்காரர்களின் வணிக truck உரிமங்களை இரத்து செய்யுமாறு Doug Ford அரசாங்கத்திற்கு மத்திய போக்குவரத்து அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

Quebec அனுப்பப்பட்ட கனடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan

சீனாவுடன் கனடா மரியாதையான உறவைப் பேணும்: சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng

Lankathas Pathmanathan

Ontarioவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

Gaya Raja

Leave a Comment