இந்த வாரம் மேலும் 5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது.கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார்.
2.8 மில்லியன் Moderna தடுப்பூசிகளையும், 2.4 மில்லியன் Pfizer தடுப்பூசிகளையும் இந்த வாரம் கனடா பெறவுள்ளது.
இதன் மூலம் June மாதம் இறுதிக்குள் கனடா 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறுவது உறுதியாகின்றது.
இதுவரை 7.5 மில்லியன் கனடியர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இன்று வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.