London Ontarioவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தால் தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
London காவல்துறைத் தலைவர் Steve Williams இந்த தகவலை தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மீது வாகனத்தை மோதிய 20 வயதான சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இவர் மீது வாகனத் தாக்குதல் தொடர்பாக நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் குறித்த விசாரணை தொடர்கின்ற நிலையில் வேறு எந்தக் குழுக்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் இவருக்கு இருந்ததாக இதுவரை தெரியவில்லை என காவல்துறைத் தலைவர் கூறினார். ஆனாலும் சந்தேக நபரை பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உட்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரிக்கின்றன.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் Justin Trudeau உட்பட பலரும் பகிரங்கமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது