இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை விகாரி COVID மாறுபாட்டின் 36 தொற்றாளர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவை அனைத்தும் சர்வதேச பயணங்களுடன் தொடர்புடையது என Ontario பொது சுகாதார மையம் தெரிவித்தது. இவற்றில் 30 தொற்றாளர்கள் விமான நிலையங்களிலும் நில எல்லை கடவைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தொற்றாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இரட்டை விகாரி மாறுபாடுகள் கனடாவின் ஏனைய மாகாணங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.