November 10, 2024
தேசியம்
செய்திகள்

அமெரிக்க தேர்தல் தொடர்பாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை

Scarborough Rouge Park தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி
ஆனந்தசங்கரி, 2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க தேர்தல்
தொடர்பாக வெளியிட்ட அறிக்கை

“ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன், துணை ஜனாதிபதியாகத்
தெரிவு செய்யப்பட்ட கமலா தேவி ஹரிஸ் ஆகியோருக்கு, அவர்களது
வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். கனடாவும், அமெரிக்காவும் நெருங்கிய
நேச நாடுகளாக விளங்குகின்றன. எமது அரசுகளுடன் இணைந்து இரண்டு
நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்குப் பணியாற்ற நான்
ஆவலாய் இருக்கிறேன்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட Joe Biden துணை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட Kamala Harris (CREDIT: GETTY IMAGES)

இன்றைய வெற்றி பல வகைளில் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது –
கமலா ஹரிஸ் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல்
பெண்ணாகவும், கறுப்பினப் பெண்ணாகவும், தமிழ்ப் பெண்ணாகவும்
விளங்குகிறார். அவரது சாதனையில், தமிழ்ச் சமூகமாக நாம் பெருமை
கொள்கிறோம். தமிழ்க் குடிவரவாளர் ஒருவரின் பிள்ளையின் இந்தச்
சாதனையை நாம் பாராட்டுகிறோம். இது எமக்கு உத்வேகத்தை அளிக்கிறது.
அவரது வழக்கையும், அனுபவமும் எமது வாழ்க்கையினதும்,
அனுபவத்தினதும் விம்பங்களாக அமைகின்றன.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி (twitter)

ஒரு சமூகமாக, நாமும், எமது பிள்ளைகளும் சாதிக்கக் கூடியவற்றுக்கு
வானமே எல்லையென நான் அறிவேன். பெண்களும், தமிழ்ப் பெண்களும்
கொண்டுள்ள தலைமைத்துவம், அறிவு, அனுபவம், நிபுணத்துவம்
என்பவற்றை நான் முக்கியமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கமலா
ஹரிஸின் வெற்றியையும், இந்த நிலையை அடைவதற்கு அவர் தடைகளைக்
கடந்து வந்ததையும் நாம் இன்று கொண்டாடுகிறோம். ஆனால், பல தமிழ்ப்
பெண்கள் சமூக அமைப்புக்களிலும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும்
அமைப்புக்களிலும், வேலை இடங்களிலும் – தலைமைத்துவம்,
முடிவெடுக்கும் பதவிகள் போன்றவற்றுறை அடைவதற்குத் தொடர்ந்து
தடைகளை எதிர்கொள்கிறார்கள். பெண்களும் சிறுமிகளும் அவர்களுக்குரிய
தலைமைப் பதவிகளைப் பெறுவதற்கு உதவியாக அவர்கள் முன்னுள்ள
தடைகளை அகற்றுவதற்கு ஒரு சமூகமாக நாம் தொடர்ந்து
செயற்படவேண்டும். கமலா ஹரிஸின் வெற்றி, பல தலைமுறைகளுக்கு
உத்வேகமளிப்பதுடன் வழிகாட்டுதலாகவும் அமையும்.”

Related posts

Toronto Blue Jays அணியின் முதலாவது ஆட்டம்

Lankathas Pathmanathan

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுப்பு

Lankathas Pathmanathan

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஆதாரவு தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment