தேசியம்
செய்திகள்

20 முதல் 25 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்!

தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் முதல் கனேடியர் குழு காசாவை விட்டு வெளியேறியுள்ளது.

கனடிய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (07) இந்த தகவலை தெரிவித்துள்ளது.

காசாவில் இருந்து வெளியேறிய முதல் குழுவில் 20 முதல் 25 கனடியர்கள் அடங்குவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

காசாவை விட்டு வெளியேறிய கனடியர்களை எகிப்தின் எல்லையில் கனடிய அதிகாரிகள் குழு சந்தித்தது என வெளியுறவு அமைச்சர் Melanie Joly உறுதிப்படுத்தினார்.

இந்தச் செய்தியை கனடிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen உறுதிப்படுத்தினார்.

கனடியர்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளனர் என அவர் கூறினார்.

கடுமையான மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து வரும் இந்த நிலையில் அந்த பிராந்தியத்திலிருந்து தனது அனைத்து குடிமக்களையும் வெளியேற்ற கனடிய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

80 கனடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், தகுதியான குடும்ப உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (07) காசாவை விட்டு வெளியேறுவார்கள் என கனடிய வெளிவிவகார அமைச்சு  எதிர்பார்க்கின்றது.

காசாவில் இருந்து வெளியேற்றப்படும் கனடியர்கள் Cairoவுக்குச் செல்வார்கள் எனவும் அங்கிருந்து கனடா வரவேற்பார்கள் எனவும் அரசாங்கம் கூறியது.

Related posts

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

அனைத்து மாகாண முதல்வர்கள் கூட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

Lankathas Pathmanathan

Leave a Comment