தேசியம்
செய்திகள்

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் தனது நாட்டிற்கு மேலும் உதவுமாறு கனடாவிடம் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

செவ்வாய்க்கிழமை (15) கனடிய நாடாளுமன்றத்தில் மெய்நிகர் வழியிலான தனது உணர்ச்சிகரமான உரையின் போது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது என தனது உரையில் அவர் கூறினார்.

தனது 20 நிமிட உரையின் போது, கனடா தனது இராணுவ, மனிதாபிமான பதில் முயற்சிகளை தொடர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

சக்திவாய்ந்த, செல்வாக்குமிக்க ரஷ்யர்கள் மீதான தடைகளை  தொடர வேண்டும் எனவும்  Zelensky  வலியுறுத்தினார்.
ரஷ்ய ஏவுகணைகள், விமானங்களின் தாக்குதலில் இருந்து உக்ரைனின் வான்வெளியை மூடுவது எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் எனவும் உக்ரைன் அதிபர்  Zelensky வலியுறுத்தினார்.
கடந்த 20 தினங்கள் தொடர்ந்த தாக்குதலில் குறைந்தது 97 சிறுவர்கள் பலியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனில் என்ன நடக்கிறது என்பது பற்றி அந்த நாட்டின் ஜனாதிபதியிடம் இருந்து நேரடியாக கேட்பதற்கு இந்த உரை ஒரு வாய்ப்பாக உள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
உக்ரைன் ஜனாதிபதியின் தைரியத்தையும், தங்கள் தாய் நாட்டைக் காக்க ஆயுதம் ஏந்திய அனைத்து உக்ரைனியர்களின் தைரியத்தையும் பிரதமர் Trudeau பாராட்டினார்.

உக்ரைன் ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து Senate சபாநாயகர் George Furey, நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota, Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen,  Bloc Quebecois தலைவர் Yves-François Blanchet, NDP தலைவர்Jagmeet Singh, பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Elizabeth May ஆகியோர் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் கொடூரமான வன்முறையை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களுடன் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

Related posts

பசுமைக் கட்சியின் உள் சச்சரவுகள் தற்காலிகமானவை: தலைவி Paul

Gaya Raja

Toronto நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் குறித்த அறிவிப்பு!

Lankathas Pathmanathan

முன்னறிவிப்பின்றி கனடா புதிய பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்: பிரதமர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment