பசுமைக் கட்சியின் உள் சச்சரவுகள் தற்காலிகமானவை என கட்சியின் தலைவி
Annamie Paul தெரிவித்தார்.
வியாழக்கிழமை Torontoவில் தனது பிரச்சார அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக Paul திறந்து வைத்தார். அங்கு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறுத்துவதற்கான முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்தார்.
பசுமைக் கட்சியின் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கைவிடும் நடுவரின் தீர்ப்பை இரத்து செய்ய கட்சி முயல்கிறது. இந்த விடயம் குறித்து கனடாவின் பசுமைக் கட்சி நீதிமன்றத்திற்குச் செல்கிறது.
கட்சியின் தலைவி Annamie Paulலின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறுத்துவதற்கான ஒரு சுயாதீனமான நடுவரின் முடிவை இரத்து செய்ய கட்சி முயற்சிக்கின்றது.
இந்த முயற்சி கட்சியின் முழு கூட்டாட்சி மன்றத்தின் அல்லது ஆளும் குழுவின் உணர்வைப் பிரதிபலிப்பதாக இல்லை எனவும் Paul கூறினார். தனக்கு எதிரான நடவடிக்கையை ஒரு சிறிய குழுவின் நகர்வு எனக்கூறிய அவர், அனைவரையும் பொறுமையுடன் இருக்குமாறு கோரினார்.