தேசியம்
செய்திகள்

குறைவடையும் கனடாவின் தடுப்பூசிகளுக்கான தேவை!

கனடாவில் COVID தடுப்பூசிகளுக்கான தேவை குறைவடைந்து வருகின்றது.

தொற்றின் நான்காவது அலையை கனடா எதிர்பார்த்துள்ள நிலையில் தடுப்பூசிக்கான தேவை குறைவடைந்து வருகின்றது. COVID தடுப்பூசிகளுக்கான கனடாவின் தேவை மெதுவாகக் குறைந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரத்தில் ஒரு நாளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான கனேடியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது June மாத இறுதியில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த தினசரி வீதமான 1.44 இலிருந்து குறைந்துள்ளது என தரவுகள் கூறுகிறது.

சில கனேடியர்கள் முதல் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர். மற்றவர்கள் mRNA தயாரிப்புகளை கலக்க விரும்பாததால் இரண்டாவது தடுப்பூசி பெறுவதை தாமதப்படுத்துகின்றனர்.

இதுவரை தகுதி வாய்ந்த கனடியர்களில் 80 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதேவேளை கனேடியர்களில் 60 சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

Related posts

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Lankathas Pathmanathan

இரண்டாவது Ontario மாகாண அரசியல் கட்சி தலைவருக்கு COVID தொற்று உறுதி

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

Leave a Comment

error: Alert: Content is protected !!