தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR பரிசோதனை தேவை நீக்கப்படுகிறது

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு வருகைக்கு முன்னதான PCR பரிசோதனை தேவையை கனடிய அரசாங்கம் நீக்குகிறது.
February 28 முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos செவ்வாய்க்கிழமை (15) அறிவித்தார்.

பயணிகள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மலிவான rapid antigen சோதனையைத் தேர்வு செய்யலாம் என அவர் கூறினார்.

இந்த சோதனைகள் ஒரு ஆய்வகம் அல்லது சுகாதார நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

கனடாவை வந்தடையும் பயணிகள் தொடர்ந்தும் சோதனைக்காக தேர்ந்தெடுக்கப்படலாம் என Duclos அறிவித்தார்.

ஆனால் அவர்களின் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் போது இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

தவிரவும் தடுப்பூசி போடப்படாத 12 வயதுக்கு உட்பட்டவர்கள், தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுடன் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.

Omicron மாறுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்டிருந்த ஆலோசனையையும் கனடிய அரசாங்கம் விலக்குகிறது

Related posts

புதிய Liberal தலைவர் Mark Carney – பிரதமர் Justin Trudeau சந்திப்பு

Lankathas Pathmanathan

கனடாவின் அரச தலைவர் மறைவு – கனேடிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

Lankathas Pathmanathan

Saskatchewan விவசாயி உக்ரைன் சண்டையில் கொல்லப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment