December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனேடிய நாடாளுமன்றத்தில் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர்

கனேடிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை என Nunavut தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மீண்டும் தேர்தலை எதிர்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையின் போது Mumilaaq Qaqqaq இந்த கருத்தை தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பாக உணராத அளவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை அடிக்கடி தடுத்து நிறுத்தியதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தனது பதவியில், குறிப்பாக நாடாளுமன்றத்திற்குள் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை என NDPயின் நாடாளுமன்ற உறுப்பினரான Qaqqaq கூறினார். அவரது கருத்துக்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்வினைகளை தூண்டிவிட்டுள்ளது.

அதேவேளை சுதேசிகள் பிரச்சினைகளில் செயலாற்றாத மத்திய அரசாங்கத்தை அவர் தனதுரையில் குற்றம் சாட்டினார். உணவு பாதுகாப்பு, வீட்டு வசதி போன்றவை உட்பட்ட விடயங்களில் அரசாங்கம் செயலாற்றவில்லை எனவும் அவர் கூறினார்.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

கனடா தொற்று எண்ணிக்கையில் ஒற்றை நாள் சாதனையை வியாழக்கிழமை பதிவு செய்தது

Gaya Raja

Paris Olympics: கனடாவின் முதலாவது பதக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment