தேசியம்
செய்திகள்

பிரதமர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற அனுமதி

பிரதமர் Justin Trudeau தனிமைப்படுத்தப்பட்ட தனது hotelலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார்.

தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட கனேடிய பிரதமரும், கனேடிய தூதுக்குழுவும் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் கனடா திருப்பினர். வெளிநாட்டு பயணத்திற்கு பின்னர்  இவர்கள் அனைவரும் Ottawaவில் தனிமைப்படுத்தலுக்காக விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர்.

Ottawa விமான நிலையத்திற்கு அருகே உள்ள இந்த மூன்று நட்சத்திர விடுதியில் இவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலை ஆரம்பித்தனர். கனேடியர்களுக்கு நடைமுறையில் உள்ள அதே COVID பயண விதிகளை பிரதமரும் அவரது உத்தியோகபூர்வ தூதுக்குழுவும் பின்பற்றும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இந்த நிலையில்  புதன்கிழமை காலை தனது எதிர்மறை COVID சோதனையை பிரதமர் பெற்றதாக Trudeau அலுவலகம் கூறுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் Ottawaவில் தரையிறங்கிய பிரதமரின் ஐரோப்பாவிற்கான தூதுக் குழுவின் உறுப்பினர்கள், விமான நிலையத்தில்  சோதனை செய்யப்பட்டு புதன்கிழமை  காலை 8 மணியளவில் எதிர்மறை சோதனை முடிவுகளை பெற்றனர்

கடந்த வாரம் ஐரோப்பாவிற்கு புறப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்னர் Trudeauவும் பயணத்தில் இருந்தவர்களும்  COVID தொற்றுக்கு  பத்து முறை வரை  சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Gaya Raja

ரஷ்ய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!