இறையாண்மை மீதான வாக்கெடுப்பு பொறுப்பற்றது என Quebec மாகாண முதல்வர் தெரிவித்தார்.
பெரும்பாலான Quebec வாக்காளர்களை இறையாண்மைக்கு ஆதரவாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக முதல்வர் François Legault கூறினார்.
இறையாண்மை மீதான மூன்றாவது வாக்கெடுப்பில் தோல்வி அடைய முடியாது எனவும் அவர் கூறினார்.
Quebec மாகாணத்தின் இன்றைய அவசர நிலை தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதாகும் என François Legault தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளில், Quebec மக்கள் தொகை 270,000 பேரால் அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டின் இறுதியில், Quebec மாகாணம் மொத்தம் 560,000 நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கொண்டிருந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை 2026 தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திட்டத்தை François Legault உறுதிப்படுத்தினார்.