தேசியம்
செய்திகள்

York பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலைப்பு

York பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்ட முகாமை காவல்துறையினர் அகற்றினர்.

இந்த பாலஸ்தீன ஆதரவு முகாம் York பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட மறுதினம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை (05) அதிகாலையில் York பல்கலைக்கழகத்தின் Keele வளாகத்தில் உள்ள Harry W. Arthurs Common பகுதியில் கூடாரங்களை அமைக்க ஆரம்பித்தனர்.

ஆனால் வியாழக்கிழமை (06) காலை York பல்கலைக்கழகம் “அங்கீகரிக்கப்படாத வளாக மைதான பயன்பாட்டுக்காக” அங்கிருந்தவர்களுக்கு அத்துமீறல் அறிவிப்புகளை வழங்கியது

பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்ற Toronto காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர்

ஆர்ப்பாட்ட முகாமில் இருந்த ஏறக்குறைய 40 எதிர்ப்பாளர்கள் காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி அங்கிருந்து வெளியேறினர்.

அந்த முகாம் பகுதிக்கு மீண்டும் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது.

Related posts

Toronto நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் குறித்த அறிவிப்பு!

Lankathas Pathmanathan

Ottawaவில் ஆறு மணி நேரத்தில் 100 மில்லி மீற்றர் மழை!

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டத்தை மாற்றும் New Brunswick

Lankathas Pathmanathan

Leave a Comment