தேசியம்
செய்திகள்

Ottawaவில் ஆறு மணி நேரத்தில் 100 மில்லி மீற்றர் மழை!

Ottawaவில் ஆறு மணி நேரத்தில் 75 முதல் 100 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது.

தொடர் புயல்கள் காரணமாக Ottawaவில் குறைந்தது 77 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையை வியாழக்கிழமை பதிவு செய்துள்ளது.

Ottawaவை காலை11:30 மணியளவில் புயல் தாக்கியது.

இதன் காரணமாக சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள், வயல்வெளிகள், தனியார் சொத்துக்கள் பெரும் ஏரிகளாக மாறின.

இந்த புயல் வெள்ளத்தால் சாலைகள், நகரின் போக்குவரத்து பாதைகளில் மூன்று அடி வரை தண்ணீர் தேங்கியது.

இது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கைவிடவும், நகரத்தை பல மணி நேரம் முக்கிய சாலைகளை மூடவும் கட்டாயப்படுத்துகிறது.

வியாழன் மாலை 5 மணி வரை Ottawa காலநிலை வானிலை நிலையத்தில் 77 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

ஆனாலும் நகரின் சில பகுதிகளில் நாள் முழுவதும் 80 முதல் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்ததாக தன்னார்வ வானிலை கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Ottawa காவல்துறையினரும் நகர அதிகாரிகளும் வெள்ளம் காரணமாக நகரம் முழுவதும் சாலைகள் மூடப்படும் என எச்சரித்தனர்.

அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

வியாழன் பிற்பகல் Ottawa, கிழக்கு Ontario ஆகிய பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்தது.

சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை உட்பட 125 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மாலை 5 மணியளவில் முடிவடைந்ததாக சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.

Related posts

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றமில்லை

குழந்தைகளுக்கான Modernaவின் COVID தடுப்பூசி – மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan

Novavax தடுப்பூசிக்குHealth கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment