இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை என கனடியத் தமிழர் பேரவை – CTC – ஏற்றுக் கொண்டுள்ளது.
வியாழக்கிழமை (16) வெளியான ஒரு அறிக்கையில் இந்த கருத்தை கனடியத் தமிழர் பேரவை கூறியுள்ளது.
ஒரு மூலோபாய நிலைப்பாடாக “இனப்படுகொலை” என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்ற தமது முடிவு சமூகத்தில் குழப்பத்தை உருவாகியுள்ளது என அந்த அறிக்கையில் CTC குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கை இனப்படுகொலை விடயத்தில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என நம்புவதாக CTC தெரிவித்துள்ளது.
1948 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாகும் என அந்த அறிக்கையில் CTC வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்படுகொலை என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவும் அதற்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இந்த அறிக்கையில் கனடிய அரசாங்கத்தை CTC கோரியுள்ளது.