தேசியம்
செய்திகள்

சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது

சரக்கு புகையிரத வண்டி ஒன்று தீப்பிடித்த சம்பவம் Ontario மாகாணத்தின் London நகரில் நிகழ்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 11 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது.

பழைய புகையிரத மர இணைப்புகளை ஏற்றிச் சென்ற ஐந்து புகையிரத பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது என London தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த புகையிரதத்தில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இருக்கவில்லை என தெரியவருகிறது.

புகை மூட்ட முன்னெச்சரிக்கை காரணமாக இந்த புகையிரதம் தீப்பிடித்த பகுதியில் வசிப்பவர்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட சேதம் 35,000 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Durham இடைத் தேர்தலில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment