தேசியம்
செய்திகள்

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட பலரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.

செவ்வாய்க்கிழமை (16) பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பல மணி நேரம் புகையிரத பாதைகள் தடைபட்டன.

மாலை 3 மணியளவில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 முதல் 120 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் மதிப்பிட்டனர்.

இரவு 7.30 மணியளவில் புகையிரத பாதையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் முயற்சியில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் GO புகையிரத  UP Express சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என Metrolinx தெரிவித்துள்ளது.

Related posts

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Gaya Raja

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan

வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser பதவி விலகினார்

Lankathas Pathmanathan

Leave a Comment