தேசியம்
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளன .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 ஆவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனுவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை நிமால் விநாயகமூர்த்தி தேசியத்திடம் செவ்வாய்க்கிழமை (16) உறுதிப்படுத்தினார்.

கனடிய தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலின் பின்னர் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக நிமால் விநாயகமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

வேட்பாளர் நேர்காணல் முடிவடைந்த சில நிமிடங்களில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு தான் போட்டியாளராக இருப்பதை தவிர்ப்பதற்காக தனது வேட்பு மனு தகுந்த காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் முதல் கனடிய அரசவை உறுப்பினராக இருந்த நிமால் விநாயகமூர்த்தி முன்னர் அமைச்சு பதவிகளையும் வகித்திருந்தார்.

தவிரவும் அவர்  மூன்றாவது பாராளுமன்ற அமர்வில் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

நிமால் விநாயகமூர்த்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் உறுப்பினரும் நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளருமாவார்.

நடைபெறவுள்ள கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

May மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கனடாவிலிருந்து 25 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் விபரங்கள் புதன்கிழமை (17) வெளியாகும் என தேர்தல் ஆணையர் செவ்வாய் இரவு தேசியத்திடம் தெரிவித்தார்.

Related posts

British Colombiaவில் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும்!

Gaya Raja

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் LGBTQ2S+ சமூகத்திற்கு கனடா பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்களுக்கு தனது அர்ப்பணிப்பை காட்டுவதற்கான வாய்ப்பை தவற விட்ட Trudeau!

Gaya Raja

Leave a Comment