தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் LGBTQ2S+ சமூகத்திற்கு கனடா பயண எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் LGBTQ2S+ சமூகத்திற்கான பயண எச்சரிக்கையை கனடிய வெளிவிவகார அமைச்சு வெளியிடுகிறது.

கனடா தனது சர்வதேச பயண எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை (29) புதுப்பித்துள்ளது.

LGBTQ+ சமூகத்தின் உறுப்பினர்கள் அமெரிக்காவில் சில இடங்களுக்கு சென்றால் அவர்கள் பாகுபாடுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

18 அமெரிக்க மாநிலங்கள் LGBTQ+ சமூகத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றிய நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் சில மாநிலங்கள் LGBTQ+ சமூகத்திற்கு எதிரான சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்றியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு செவ்வாயன்று கூறுகிறது.

இதனால் அமெரிக்காவுக்கான பயண எச்சரிக்கையை மாற்றுவதாக  கனடிய வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

LGBTQ+ சமூகத்திற்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் தீவிரமாகி வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை கடந்த May மாதம் எச்சரித்தது.

Related posts

கனடாவில் 94 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு!

Gaya Raja

அமெரிக்க அதிபர் கனடாவுக்கு பயணம்

Lankathas Pathmanathan

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சிகளில் தலைவர்கள்!

Gaya Raja

Leave a Comment