இந்த வாரம் தைவானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் ஒரு கனடியர் காணாமல் போயுள்ளார்.
அதேவேளை கனடாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கனடிய தலைநகர் Ottawaவில் உள்ள தைவானின் உயர்மட்ட தூதர் Harry Tseng இந்த தகவலை வெளியிட்டார்.
காணாமல் போனவர் குறித்த விவரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என அவர் கூறினார்.
ஆனால் மீட்கப்பட்ட கனடியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன நபரை மீட்புக் குழுவினர் விரைவில் கண்டுபிடிக்க முடியும் என நம்புவதாக Harry Tseng கூறுகிறார்.
நிலநடுக்கப் பகுதியில் இருந்து மொத்தம் மூன்று கனடியர்கள் மீட்கப்பட்டதாகவும், நான்காவது ஒருவரைக் காணவில்லை எனவும் தைவான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
7.2 ரிக்டர் அளவிலான இந்த நில நடுக்கத்தில் , 10 பேர் பலியாகினர். 1,099 பேர் காயமடைந்தனர்.